வரலாற்றில் அமெரிக்கா மிகப்பெரிய வலியை அனுபவிக்கப் போகிறது: வடகொரியா மிரட்டல்

தி இந்து  தி இந்து
வரலாற்றில் அமெரிக்கா மிகப்பெரிய வலியை அனுபவிக்கப் போகிறது: வடகொரியா மிரட்டல்

எங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்ததற்காக வரலாற்றில் அமெரிக்கா மிகப் பெரிய வலியை அனுபவிக்கப் போகிறது என்று வடகொரியா கூறியுள்ளது.

கடந்த செம்டம்பர் மாதம் 3-ம் தேதி 6-வது முறையாக அணுகுண்டு சோதனையை வடகொரியா நடத்தியது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த புதிய பொருளாதார தடைக்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் திங்கட்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ஐ.நாவுக்கான வடகொரியா தூதர் ஹான் டே சாங் கூறும்போதும், ”வடகொரியாவின் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது.  இதற்கு வரலாற்றில் அமெரிக்கா அனுபவிக்காத வலியை உணரப் போகிறது” என்றார்.

சிறிய நடவடிக்கையே..

வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் குறித்து ட்ரம்ப் கூறும்போது, "அணுஆயுத சோதனைகளில் ஈடுபட்ட பிற நாடுகளிடம் நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையை ஒப்பிட்டு பார்த்தால் வடகொரியா மீது நாங்கள் எடுத்தது சிறிய நடவடிக்கைதான்” என்றார்.

மூலக்கதை