உலக லெவன் தொடர் இன்று தொடக்கம்: பாகிஸ்தான் பற்றிய பாசிட்டிவ் விஷயங்களை வீரர்களிடம் கூறினேன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக லெவன் தொடர் இன்று தொடக்கம்: பாகிஸ்தான் பற்றிய பாசிட்டிவ் விஷயங்களை வீரர்களிடம் கூறினேன்

லாகூர்: உலக லெவன்-பாகிஸ்தான் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. 2வது போட்டி நாளையும், 3வது மற்றும் கடைசி போட்டி 15ம் தேதியும் அரங்கேறுகிறது.

மூன்று போட்டிகளும் லாகூர் கடாபி மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. பாகிஸ்தான் மண்ணில் மீண்டும், சர்வதேச கிரிக்கெட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக இந்த தொடர் நடத்தப்படுகிறது.

கடந்த 8 ஆண்டு கால அளவில், பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் முதல் முக்கியமான தொடர் இதுவே. இதற்காக லாகூரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



பாகிஸ்தானில் பிறந்தவரும், தென் ஆப்ரிக்க அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான இம்ரான் தாஹிர் உலக லெவன் அணியில் இடம் பிடித்துள்ளார். தொடர் குறித்து அவர் கூறுகையில், ‘’பாகிஸ்தான் பற்றிய பாசிட்டிவ் விஷயங்களை அணி வீரர்களிடம் கூறினேன்.

ஏனெனில் இங்கு வசிக்கும் எனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நான் வந்து செல்கிறேன். வீரர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தேன்.

அதன்பின்பே அவர்கள் வந்தனர். என் வார்த்தைகளை நம்பிய வீரர்களுக்கு நன்றி.

இந்த 3 போட்டிகளும் நடைபெறவுள்ளது என கூறப்பட்டபோது, பாகிஸ்தான் செல்ல விரும்புகிறேன் என கூறிய முதல் ஆள் நானாகதான் இருப்பேன்’’ என்றார்.


.

மூலக்கதை