மூன்று வகையான போட்டிகளுக்கும் தென் ஆப்ரிக்க கேப்டனாக டூ பிளெஸ்ஸிஸ் நியமனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மூன்று வகையான போட்டிகளுக்கும் தென் ஆப்ரிக்க கேப்டனாக டூ பிளெஸ்ஸிஸ் நியமனம்

ஜோஹன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்க ஒரு நாள் போட்டிகளுக்கான அணிக்கு டி வில்லியர்ஸ் கேப்டனாக செயல்பட்டு வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் கேப்டன் பொறுப்பில் இருந்து டி வில்லியர்ஸ் திடீரென விலகினார்.

இதனால் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியின் கேப்டன் பொறுப்பு, டெஸ்ட் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூன்று வகையான போட்டிகளிலும் இனி தென் ஆப்ரிக்க அணியை டூ பிளெஸ்ஸிஸ் தலைமையேற்று வழிநடத்துவார்.

மூன்று வகையான போட்டிகளுக்கும் அவரை கேப்டனாக நியமிப்பது தொடர்பான தேசிய தேர்வு குழுவின் பரிந்துரைக்கு, தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டின் (சிஎஸ்ஏ) இயக்குனர்கள் வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்பின்பு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சிஎஸ்ஏ தலைமை செயல் அதிகாரி ஹரூன் லார்கெட் கூறுகையில், ‘’உலக கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக தன்னை டூ பிளெஸ்ஸிஸ் நிரூபித்துள்ளார்.

இதன் எதிரொலியாகதான் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள உலக லெவன் அணியின் கேப்டனாகவும் டூ பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்றார்.

.

மூலக்கதை