2 நாளில் 2 கிராண்ட்ஸ்லாம் மார்டினா ஹிங்கிஸ் அபாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
2 நாளில் 2 கிராண்ட்ஸ்லாம் மார்டினா ஹிங்கிஸ் அபாரம்

யு. எஸ். ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில், மார்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)-சான் யுங் ஜன் (தைவான்) ஜோடி, 6-3, 6-2 என்ற செட் கணக்கில், லூசி ஹரேட்கா-கேத்ரினா சினிகோவா ஜோடியை (இருவரும் செக் குடியரசு) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

சான் யுங் ஜன் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். அவரது பார்ட்னரான மார்டினா ஹிங்கிஸ் 25வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

ஒற்றையர் பிரிவில் 5 முறையும், இரட்டையர் பிரிவில் 13 முறையும், கலப்பு இரட்டையர் பிரிவில் 7 முறையும் அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.

நேற்று முன் தினம் நள்ளிரவில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில், பிரிட்டனின் ஜேமி முர்ரேவுடன் இணைந்து விளையாடி, மார்டினா ஹிங்கிஸ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தத்தில் இரண்டே நாட்களில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை மார்டினா ஹிங்கிஸ் வென்றுள்ளார்.

.

மூலக்கதை