டி20 போட்டியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டி20 போட்டியில் இந்தியாஇலங்கை இன்று மோதல்

கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 3-0, ஒரு நாள் தொடரை 5-0 என இந்தியா  முழுமையாக கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது.

இரு அணிகள் மோதும் ஒரே ஒரு டி20 போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று இரவு  நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

டி20 போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்பில் இந்தியா உள்ளது.

கேப்டன் கோஹ்லி, ரோகித் சர்மா, டோனி,  மனிஷ்பாண்டே, லோகேஸ் ராகுல், கேதர்ஜாதவ், பாண்டியா என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பந்து வீச்சில் பும்ரா, புவனேஸ்வர்குமார், அக்‌ஷர்பட்டேல் சூப்பர்  பார்மில் உள்ளனர்.
மறுபுறம் ஆறுதல் வெற்றியாவது பெறவேண்டிய நெருக்கடியில் இலங்கை உள்ளது.

டி20யில் இலங்கையை கணிக்க முடியாது. இரு அணிகளும் இதுவரை 10 டி20  போட்டியில் மோதி உள்ளன.

இதில் இந்தியா 6, இலங்கை 4 போட்டிகளில் வென்றுள்ளன.

தரவரிசையில் இந்தியா 5வது இடத்திலும், இலங்கை 8வது இடத்திலும் உள்ளன.

.

மூலக்கதை