டெஸ்ட்டை போல் இலங்கை மீண்டும் ஒயிட்வாஷ் ஒரு நாள் தொடரை 5-0 என வென்றது ஆச்சரியம் அளிக்கிறது: இந்திய கேப்டன் கோஹ்லி கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெஸ்ட்டை போல் இலங்கை மீண்டும் ஒயிட்வாஷ் ஒரு நாள் தொடரை 50 என வென்றது ஆச்சரியம் அளிக்கிறது: இந்திய கேப்டன் கோஹ்லி கருத்து

கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா  முழுமையாக கைப்பற்றியது.

இதன்பின் நடந்து வந்த ஒரு நாள் தொடரிலும், 4-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்த நிலையில், 5வது மற்றும் கடைசி  போட்டி கொழும்புவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை 49. 4 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

புவனேஸ்வர்குமார் 5, பும்ரா 2, குல்தீப் யாதவ்,  சஹால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் பேட் செய்த இந்தியா, 46. 3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது.

கேப்டன் விராட் ேகாஹ்லி ஆட்டமிழக்காமல் 110, கேதர் ஜாதவ் 63 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் ஒரு நாள் தொடரையும் 5-0 என்ற கணக்கில் இந்தியா  முழுமையாக கைப்பற்றியது.

புவனேஸ்வர்குமார் ஆட்ட நாயகன் விருதும், பும்ரா தொடர் நாயகன் விருதும் (5 போட்டிகளில் 15 விக்கெட்கள்) வென்றனர்.

 இது குறித்து இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ‘’ஒரு நாள் தொடரை, 5-0 என்ற கணக்கில் வென்றது அற்புதமானது.

இது எங்களுக்கு சற்று  ஆச்சரியத்தையும் அளிக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் ெகாண்ட தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்றே நாங்கள் நினைத்து கொண்டிருந்தோம்.

ஆனால்  சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்களுக்கு பாராட்டுக்கள். பும்ரா மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர்.

நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட  போட்டிகளில் தொடர்ச்சியாக 3 போட்டிகளுக்கு மேல் வெல்ல முடியாதது பற்றிய பேச்சு இருந்தது. ஆனால் தற்போது 5 போட்டிகளில் வென்றுள்ளோம்.

இந்த சிறப்பான  பார்முடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வோம்’’ என்றார். இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு டி20 ேபாட்டி, வரும் 6ம் தேதி (நாளை மறு நாள்) இரவு 7 மணிக்கு  கொழும்புவில் நடைபெறுகிறது.



தரவரிசைபட்டியல்
இலங்கை தொடருக்கு முன் இந்தியா, ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் 114 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்தது. தொடரை கைப்பற்றிய நிலையில் 3 புள்ளிகள் அதிகம்  பெற்று 117 புள்ளிகளுடன் 3வது இடத்தை தக்க வைத்துள்ளது.

ஆஸ்திரேலியா 117  புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இலங்கை 2 புள்ளிகளை இழந்து 8வது இடத்தில்  நீடிக்கிறது.



.

மூலக்கதை