இலங்கையில் சிம் அட்டை கொள்வனவு செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகள்..!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கையில் சிம் அட்டை கொள்வனவு செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகள்..!

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி சிம் அட்டைகளை விநியோகிக்கும் போது புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
 
புதிய சிம் அட்டைகளை பெற்றுக் கொள்ளும் போது அதன் உரிமையாளரின் சரியான தகவல்கள் வழங்கப்படாத அதிகளவான இலக்கங்கள் நடைமுறையில் காணப்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
 
சிம் அட்டைகளில் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் சமாதானத்தை பாதுகாப்பதற்காகவும், அடையாளத்தை உறுதி செய்யக் கூடிய தகவல்களுடன் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
இதன்மூலம் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பல்வேறு குற்றங்கள் மற்றும் மோசடி செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
அதற்கமைய உரிய முறையில் முழுமையாக பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சிம் அட்டையை பயன்படுத்தும் நபரின் தேசிய அடையாள அட்டையின் பிரதி உட்பட அவசியமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.
 
இந்த நடைமுறையை பின்பற்றுமாறு ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இந்த யோசனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
 

மூலக்கதை