சர்ச்சை பேச்சு: ஜெகன் மீது தேர்தல் ஆணையம் வழக்கு

தினமலர்  தினமலர்
சர்ச்சை பேச்சு: ஜெகன் மீது தேர்தல் ஆணையம் வழக்கு

ஐதராபாத்: இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது வன்முறையை தூண்டும் விதமாக பேசிய ஒய்.எஸ்.ஆர்.,காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சை பேச்சு:


ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நந்தியால் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. கடந்த 3-ம் தேதி நடந்த பிரசாரத்தில் ஒய்.எஸ்.ஆர்.,காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பொய்யான தேர்தல் வாக்குறுதி தந்த முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பொது இடத்தில் வைத்து சுட்டு கொன்றால் தவறு இல்லை என்றார்.

வழக்குப்பதிவு:


வன்முறையை தூண்டும் விதமாக பேசிய ஜெகன் மோகன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தரப்பட்டது. தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக ஜெகன் மீது வழக்குப்பதிய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதையடுத்து மக்கள் பிரதிநிதி சட்டம் 188, 504, 506 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதியப்பட்டது.

மூலக்கதை