‛பாக்., மீது மீண்டும் வான்வழி தாக்குதல்': அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

தினமலர்  தினமலர்
‛பாக்., மீது மீண்டும் வான்வழி தாக்குதல்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

வாஷிங்டன் : ''பாகிஸ்தான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதலை தொடங்கும்'', என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

ஒபாமா ஆட்சியின்போது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை குறிவைத்து, அமெரிக்க ராணுவம் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இப்போது டிரம்ப் அரசு, பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடினமான நகர்வை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் காவஜா முகமது ஆசிப் விரைவில் வாஷிங்டன் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ''பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதலை தொடங்கும்'', என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

மூலக்கதை