ஜான்சன் பவுடரினால் பெண்ணுக்கு புற்றுநோய்! நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

PARIS TAMIL  PARIS TAMIL
ஜான்சன் பவுடரினால் பெண்ணுக்கு புற்றுநோய்! நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, 2600 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க அந்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
 
பிரபல நிறுவனமான ஜான்சன் அன்ட் ஜான்சன் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர், ஷாம்பூ, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 
 
இந்நிலையில், ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடரை சிறுவயது முதலே பயன்படுத்தியதால், தனக்கு கர்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்துவரும் 63 வயதான பெண் ஒருவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ செலவு மற்றும் அபராதத்தொகையாக 417 மில்லியன் டாலர்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது.
 
இந்திய ரூபாய் மதிப்பில் 2600 கோடி ரூபாய் ஆகும். பிரபல நிறுவனமான ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய் ஏற்படுவதாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது. 

மூலக்கதை