இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் பங்கு வெளியிட, ‘செபி’ ஒப்புதல்

தினமலர்  தினமலர்
இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் பங்கு வெளியிட, ‘செபி’ ஒப்புதல்

புதுடில்லி : டில்­லி­யைச் சேர்ந்த, இந்­தி­யன் எனர்ஜி எக்ஸ்­சேஞ்ச் நிறு­வ­னத்­தின் புதிய பங்கு வெளி­யீட்­டிற்கு, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­ய­மான, ‘செபி’ ஒப்­பு­தல் அளித்­து உள்­ளது.

நாட்­டின், முதல் மின் வணிக சந்தை என்ற சிறப்பை பெற்ற, இந்­தி­யன் எனர்ஜி எக்ஸ்­சேஞ்ச், 2008ல் துவக்­கப்­பட்­டது. இந்­நி­று­வ­னத்­தில், டாடா பவர், ஆதித்ய பிர்லா குழு­மம், மாடி­சன் இந்­தியா கேப்­பி­ட்டல் உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள், பங்கு முத­லீடு மேற்­கொண்டு உள்­ளன. புதிய பங்கு வெளி­யீட்டை, ஆக்­சிஸ் கேப்­பிட்­டல், கோடக் மகிந்­திரா கேப்­பிட்­டல், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்­டிங்ஸ் ஆகி­யவை நிர்­வ­கிக்க உள்­ளன. மொத்­தம், 60 லட்­சம் பங்­கு­கள் விற்­ப­னைக்கு வரும் என, தெரி­கிறது. பங்கு விலை, வெளி­யீட்டு தேதி உள்­ளிட்ட விப­ரங்­கள், விரை­வில் வெளி­யா­கும்.

இந்­தி­யா­வில், 2012ல், மல்டி கமா­டிட்டி எக்ஸ்­சேஞ்ச் நிறு­வ­னம், முதன்­மு­த­லாக, பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்­கி­யது. அதை தொடர்ந்து, மும்பை பங்­குச் சந்தை, பங்கு வெளி­யீடு மேற்­கொண்­டது. தேசிய பங்­குச் சந்தை, பங்கு வெளி­யீட்­டிற்கு அனு­மதி கோரி, ஏற்­க­னவே, ‘செபி’யிடம் விண்­ணப்­பித்து உள்­ளது.

மூலக்கதை