லண்டனில் உயிரிழந்த சகோதரன்: இலங்கை சகோதரிக்கு ஏற்பட்ட மாற்றம்!

PARIS TAMIL  PARIS TAMIL
லண்டனில் உயிரிழந்த சகோதரன்: இலங்கை சகோதரிக்கு ஏற்பட்ட மாற்றம்!

கடந்த ஒரு வடத்திற்கு முன்னர் பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்ற நிலையில் 5 இலங்கை இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
 
கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 24ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 22 வயதுடைய நிதர்ஷன் ரவி, 23 வயதுடைய இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராஜா, 22 வயதான கோபிநாதன், 19 வயதான கெனிகன் சத்தியநாதன், 27 வயதான குருசாந்த் சிறிதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாகும்.
 
இந்த நிலையில் உயிரிழந்த இந்துஷன் தொடர்பில் அவரது சகோதரி  கிருஷாந்தனி சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
 
இந்துஷன் உயிரிழந்து இரண்டு மாதங்களில் அவரது சகோதரரிக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
 
“ஒரு குழந்தை பிறக்கும்போது, சடங்குகள் நடத்தப்படுகின்றது. பொதுவாக ஒரு மாமாவால் நடத்தப்படுகின்றன. ஆனால் அந்த விழாக்களில் எந்த ஒன்றையும் நாங்கள் செய்யவில்லை” என கிருஷாந்தி தெரிவித்துள்ளார்.
 
தன் குழந்தையைப் பார்த்தபோது, சகோதரனின் எதையோ ஒன்றை பார்க்க முடிந்தது என அவருக்கு தோன்றியுள்ளது. சகோதரனின் உற்சாகம், குறும்புத்தன் மற்றும் சில முகபாவங்களை குழந்தையிடம் காண முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
“குழந்தை பிறப்பு மாத்திரம் தான் சகோதரனின் இழப்பை தாங்கிக் கொள்ள உதவியது. அவர் என் குழந்தையின் வடிவில் எங்களுக்கு திரும்பி வந்தார் என நினைத்தேன்” என அவர் கூறியுள்ளார்.
 
குழந்தைக்கு பெயரிடும் சந்தர்ப்பம் வரும் போது இந்துஷன் என அழைப்பதற்கு அவர் தீர்மானித்துள்ளார். அவரது குழந்தை தனது மாமாவை சந்திக்கவில்லை எனினும் நினைவாக இருக்க வேண்டும் என இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் வியாழக்கிழமை அந்த இளைஞர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அதற்கமைய அந்த இளைஞர்களின் குடும்பத்தினர் அவர்கள் உயிரிழந்த கடற்கரைக்கு சென்று அவர்களை நினைவு கூறவுள்ளனர். 
 
5 மெழுகுவர்த்திகளை ஏற்றி 5 பேரையும் ஒன்றாக நிறைவு கூற இந்த குடும்பத்தினர் எண்ணியுள்ளதாக கூறப்படுகின்றது.
 

மூலக்கதை