மாதவனுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய்?

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
மாதவனுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய்?

ஹிந்திப் படமொன்றில் மாதவனும், ஐஸ்வர்யா ராயும் ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

  மணிரத்னம் இயக்கிய ‘குரு’ படத்தில், மாதவனுக்கு ஜோடியாக நடித்தார் ஐஸ்வர்யா ராய். ஆனால், அந்தப் படத்தில் இவர்களுக்கு ரொமான்ஸ் என்று பெரிதாக எதுவும் இல்லை.

இந்நிலையில், மறுபடியும் இந்த ஜோடி இணைய இருப்பதாக  கூறப்படுகிறது.   ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கும் ‘ஃபேன்னி கான்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய். அவருக்கு ஜோடியாக நடிக்க ராஜ்குமார் ராவ், விக்கி கெளசல் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தற்போது மாதவனிடம் பேசியிருக்கிறார்கள்.

மாதவன் ஓகே சொன்னால், விரைவில் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்கிறார்கள்.

.

மூலக்கதை