தினகரனின் அடுத்தடுத்த அதிரடி... பழனிசாமியுடன் பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனை!

விகடன்  விகடன்
தினகரனின் அடுத்தடுத்த அதிரடி... பழனிசாமியுடன் பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனை!

தமிழகத்தில் ’நம்பிக்கை வாக்கெடுப்பு’  என்னும் வார்த்தை மீண்டும் மேலோங்கியுள்ள இந்த பரபரப்பான சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 


 

அ.தி.மு.க இணைப்பு குறித்து டி.டி.வி. தினகரன் நேரடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ’துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை!’ என்று தினகரனின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் என்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இந்த 19 பேரும் இணைந்து இன்று காலை ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். அந்த கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் ’ஆட்சியை கவிழ்க்கவும் தயங்கமாட்டோம்’ என்று டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூறியுள்ளனர். இந்த பரபரப்பான சூழலில் முதல்வர் உடன் துணை முதல்வர் ஆலோசனை நடத்தி வருவது முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பில் அமைச்சர்களும் பங்குபெற்றுள்ளனர். ஆட்சி கவிழுமா? நிலைக்குமா? என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது!

மூலக்கதை