1.5 கோடி மக்கள் பாதிப்பு : மேற்கு வங்கத்தில் மழை: 152 பேர் பலி: முதல்வர் மம்தா தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
1.5 கோடி மக்கள் பாதிப்பு : மேற்கு வங்கத்தில் மழை: 152 பேர் பலி: முதல்வர் மம்தா தகவல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மழை வெள்ளத்துக்கு 152 பேர் பலியாகி இருப்பதாகவும், சுமார் ஒன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.

நேபாளம், வங்க தேசத்தை ஒட்டிய வடமாநிலங்களில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பிரமபுத்ரா, கங்கை மற்றம் அதன் துணை நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அசாம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.



பீகாரில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 250ஐ தாண்டியுள்ளது.   மேற்கு வங்கத்திலும் பலி எண்ணிக்கை 150ஐ தாண்டியுள்ளது. வெள்ள சேதங்களை மே. வங்க முதல்வர் மம்தா நேற்று ெஹலிகாப்டரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மேற்கு வங்கத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இயற்கை சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

அதனை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்பணிகளை நாம் மேற்கொள்ளலாம். ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அதன் உபரி நீர் சாலைகளுக்கு வந்து விட்டது.

பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து விட்டது. மழை வெள்ளத்துக்கு இதுவரை மேற்கு வங்கத்தில் 152 பேர் பலியாகியுள்ளனர்.

ஒன்றரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத், அசாம் மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.

2 ஆயிரம் கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கியுள்ளது. இது போன்ற பாதிப்பை மே. வங்கமும் சந்தித்துள்ளது.

நிவாரண உதவி வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. இவ்வாறு கூறினார்.

அசாமில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த மாநிலத்தில் உள்ள  காசிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில் 13 காண்டா மிருகங்கள், 188 மான்கள், 4  யானைகள், ஒரு புலி உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை