இந்த ஆண்டு 16 புதிய படங்களை வாங்கியது ஜீ தமிழ்

தினமலர்  தினமலர்
இந்த ஆண்டு 16 புதிய படங்களை வாங்கியது ஜீ தமிழ்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புதிய படங்களை வாங்குவதில் சேனல்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதுவும் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் பெரிய படங்களை வாங்குவதில் போட்டாபோட்டி நிலவுகிறது. 5 கோடி முதல் 15 கோடி வரை கொடுத்து உரிமம் பெறப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஜீ தமிழ் இதுவரை 16 படங்களின் உரிமத்தை வாங்கி முதலிடத்தில் இருக்கிறது. அதே கண்கள், எனக்கு வாய்த்த அடிமைகள், எமன், டோரா, கவன், சிவலிங்கா, 8 தோட்டாக்கள், மரகத நாணயம், வனமகன், இவன் தந்திரன், நிபுணன், பொதுவாக என்மனசு தங்கம், புரியாத புதிர், இடம் பொருள் ஏவல், சர்வர் சுந்தரம், ஸ்பைடர் ஆகிய படங்களை வாங்கி உள்ளது. மாதத்திற்கு இரண்டு புதிய படங்கள் என்கிற வகையில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. இதுவல்லாமல் கடந்த ஆகஸ்ட் 15ந் தேதி ஆமீர்கான் நடித்த சூப்பர் குட் படமான தங்கலை ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை