100 கோடி வசூலைவிட ரேட்டிங் முக்கியம்: இயக்குனர் ஹன்சலி மேத்தா

தினமலர்  தினமலர்
100 கோடி வசூலைவிட ரேட்டிங் முக்கியம்: இயக்குனர் ஹன்சலி மேத்தா

எல்வி பிரசாத் பிலிம் மற்றும் டிவி அகடாமியின் 11ஆவது பட்டமளிப்பு விழா சென்னை பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடந்தது. விழாவில் ஹிந்திப்பட இயக்குனர் ஹன்சல் மேத்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 34 மாணவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

ஒரு விருது வாங்க எனக்கு 15 வருடங்கள் ஆகியது. நீங்கள் இப்போதே வாங்கியிருக்கிறீர்கள். அந்த ஸ்பிரிட்டை தக்க வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு எஞ்சினியர், இயக்குனரானது ஒரு விபத்து. ஷாகித் படத்துக்கு முன்பு 9 படங்கள் இயக்கியிருந்தாலும் ஷாகித் என் இரண்டாவது இன்னிங்க்ஸ். ஷாகித் என்னுடைய டிப்ளமோ திரைப்படம் போன்றது. ஷாகித் படத்தை நான் 35 லட்சத்தில், 11 மாதத்தில் எடுத்து முடித்தேன். டிஜிட்டல் யுகத்தில் கெனான் 5டி கேமராவில் தான் பெரும்பகுதி படத்தை படம் பிடித்தேன்.

சினிமாவில் கதை சொல்வது தான் முக்கியம். என்னுடைய கதை எப்படி பலரை போய் சென்றடையும் என்பதை தான் யோசிப்பேன். வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைக்காக நான் படம் எடுப்பதில்லை. எதிர்காலத்துக்காக படம் எடுக்கிறேன். டிஜிட்டல் பிளாட்பாரத்தால் நாம் நினைத்த கதையை எந்த இடையூறும் இன்றி சொல்ல முடியும். முதலில் உங்கள் படத்துக்கு நல்ல ரேட்டிங் வாங்க முயலுங்கள், நூறு கோடி வசூலை பின்பு பார்த்துக் கொள்ளலாம். சினிமா என்பது முற்றிலும் ஒரு கலை. அதில் நாமும் ஒரு பங்காக இருப்பது பெருமை/ என்றார்.

மூலக்கதை