பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

PARIS TAMIL  PARIS TAMIL
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கையை இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு யுக்திகள் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த தகவலை வெளியிட்டார்.

மேலும் டிரம்ப் கூறுகையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் புகலிடம் கொடுக்கும் விவகாரத்தில் நாங்கள் இனி அமைதியாக இருக்க மாட்டோம். ஆப்கானிஸ்தானில் நாங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் பங்கு கொண்டு பாகிஸ்தான் அதிக பயன்பெறுகிறது. பயங்கரவாதம் மற்றும் கிரிமினல்களுக்கு உறைவிடம் கொடுப்பதை தொடர்ந்தால் பாகிஸ்தான் அதிக இழப்புகளை பெற நேரிடும்.

 பில்லியன் கணக்கில் பாகிஸ்தானுக்கு நாம் நிதி கொடுக்கும் வேளையில், நாம் போரிடும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுக்கிறது. இந்த விஷயம் மாற வேண்டும். இது உடனடியாக மாற வேண்டும். இந்தியாவுடனான உறவுகளை மேலும் மேம்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. ஆப்கான் விவகாரத்தில் குறிப்பாக ஆப்கானிஸ்தான் பொருளதார துறையில் இந்தியா, அமெரிக்காவுக்கு மேலும் உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

மூலக்கதை