ஆப்கன் விவகாரத்தில் அமெரிக்கா இன்று முக்கிய முடிவு

தினமலர்  தினமலர்
ஆப்கன் விவகாரத்தில் அமெரிக்கா இன்று முக்கிய முடிவு

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை குறித்து அதிபர் டிரம்ப் இன்று(ஆக., 22) முக்கிய முடிவினை அறிவிக்க உள்ளார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின், பயங்கரவாதிகளை அழிக்க கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் ஆப்கனில் முகாமிட்டுள்ளனர். இருப்பினும் பயங்கரவாதிகளை முழுமையாக அடக்க முடியவில்லை. 60 சதவீத இடங்கள் மட்டுமே ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், ஆப்கனில் அமெரிக்க படைகளை அதிகரிக்கும் முக்கிய முடிவினை, அதிபர் டிரம்ப் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு இன்று அறிவிக்க உள்ளார்.

மூலக்கதை