அனுடெக் உணவு கண்காட்சி

தினமலர்  தினமலர்
அனுடெக் உணவு கண்காட்சி

புதுடில்லி : டில்­லி­யில், அனு­டெக் சர்­வ­தேச உணவு தொழில்­நுட்ப கண்­காட்சி, நேற்று துவங்­கி­யது.
இது குறித்து, இக்­கண்­காட்­சிக்கு ஏற்­பாடு செய்­துள்ள, கோல்ன்­மெஸ்ஸி ஒய்.ஏ., டிரேட்­பேர் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: மூன்று நாட்­கள் நடை­பெ­றும் இக்­கண்­காட்­சி­யில், அமெ­ரிக்கா, சீனா, ஜெர்­மனி, சீனா உள்­ளிட்ட நாடு­க­ளைச் சேர்ந்த, உணவு பதப்­ப­டுத்­தும் தொழில் நிறு­வ­னங்­கள், அவற்­றின் தயா­ரிப்­பு­களை பார்­வைக்கு வைத்­துள்ளன.

உணவு தயா­ரிப்பு, பதப்­ப­டுத்­து­தல், பேக்­கே­ஜிங், தர மேலாண்மை, தானி­யங்கி செயல்­மு­றை­கள், வினி­யோ­கம் உள்­ளிட்ட பல்­வேறு பிரி­வு­களில், சர்­வ­தேச அள­வில், தற்­போது கடை­பி­டிக்­கப்­பட்டு வரும் நவீன தொழில்­நுட்­பங்­கள், இயந்­தி­ரங்­கள் ஆகி­ய­வற்றை, இக்­கண்­காட்­சி­யில் காண­லாம். உள்­நாடு மட்­டு­மின்றி, மத்­திய கிழக்கு நாடு­கள், ‘சார்க்’ உள்­ளிட்­ட­வற்­றில் இருந்­தும், இக்­கண்­காட்­சியை காண வரு­வர். உண­வுத் தொழில் சார்ந்த அனைத்து தக­வல்­க­ளை­யும், ஒரே இடத்­தில் பெற, இக்­கண்­காட்சி வாய்ப்­ப­ளித்து உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

இக்­கண்­காட்சி குறித்து, கோவை­யைச் சேர்ந்த, ‘ஸ்பெக்ட்ரா பிளாஸ்ட்’ நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர், எஸ்.ராம்­கு­மார் கூறு­கை­யில், ‘‘விவ­சா­யி­கள், நுகர்­வோர் மட்­டு­மின்றி, அனைத்து தரப்­பி­ன­ருக்­கும் பய­ன­ளிக்­கக் கூடிய, உணவு பதப்­ப­டுத்­தும் துறையை, முழு­மை­யாக அறிய இக்­கண்­காட்சி உத­வும்,’’ என்­றார்.

மூலக்கதை