வசதியானோர் திரும்ப தராத கடன்: எஸ்.பி.ஐ., முதலிடம்

தினமலர்  தினமலர்
வசதியானோர் திரும்ப தராத கடன்: எஸ்.பி.ஐ., முதலிடம்

புதுடில்லி : வசதி இருந்­தும், கடனை திரும்­பச் செலுத்­தா­மல் உள்ள வாடிக்­கை­யா­ளர்­கள் கணக்­கில், எஸ்.பி.ஐ., எனப்­படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, 27 சத­வீத பங்­கு­டன், முத­லி­டத்­தில் உள்­ளது.

மத்­திய நிதி­ய­மைச்­ச­கம், பொதுத் துறை வங்­கி­களில், வசதி இருந்­தும் கடனை திரும்ப அளிக்­கா­த­வர்­கள் குறித்த பட்­டி­யலை வெளி­யிட்டு உள்­ளது. அதன்­படி, இந்­தாண்டு மார்ச் நில­வ­ரப்­படி, வசதி இருந்­தும் கடனை திரும்பத் தராத, 1,762 வாடிக்­கை­யா­ளர்­களின் கணக்­கு­களில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யா­வுக்கு, 25,104 கோடி ரூபாய் வர வேண்­டி­யுள்­ளது. இப்­பி­ரி­வில், இவ்­வங்கி, 27 சத­வீத பங்­க­ளிப்­பு­டன் முத­லி­டத்­தில் உள்­ளது.இதே பிரி­வில், பஞ்­சாப் நேஷ­னல் வங்கி, 1,120 கடன்­தா­ரர்­க­ளி­டம் இருந்து, 12,278 கோடி ரூபாய் வசூ­லிக்க வேண்­டி­யுள்­ளது.

மதிப்­பீட்டு காலத்­தில், வசதி இருந்­தும் கடனை திரும்­பத் தரா­தோர் பிரி­வில், பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, மொத்­தம், 92,376 கோடி ரூபாய் நிலுவை உள்­ளது. இதில், எஸ்.பி.ஐ., மற்றும் பஞ்­சாப் நேஷ­னல் வங்­கிக்கு வர வேண்­டிய தொகை மட்­டும், 40 சத­வீ­தம்; அதா­வது, 37,382 கோடி ரூபாய் ஆகும்.

வசதி இருந்­தும் கடனை திரும்­பத் தரா­தோர் கணக்­கின் கீழ், 2015 – 16ம் நிதி­யாண்­டில், பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு வர வேண்­டிய தொகை, 76,685 கோடி ரூபா­யாக இருந்­தது. இது, 2016 – 17ம் நிதி­யாண்­டில், 20.4 சத­வீ­தம் உயர்ந்து, 92,376 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.

20 வங்கிகளின் நிலுவை:
ஜூன் இறுதி நில­வ­ரப்­படி, எஸ்.பி.ஐ., உள்­ளிட்ட, 18 பொதுத் துறை வங்­கி­கள்; தனி­யார் துறை­யைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்­சிஸ் வங்கி ஆகி­ய­வற்­றின் வாராக்­க­டன், 8,29,338 கோடி ரூபா­யாக உள்­ளது. இதில், எஸ்.பி.ஐ., 22.7 சத­வீ­தம், அதா­வது, 1,88,068 கோடி ரூபாய் வாராக்­க­ட­னு­டன், முத­லி­டத்­தில் உள்­ளது.

மூலக்கதை