‘நிடி ஆயோக்’ சி.இ.ஓ., குழுக்கள் அமைப்பு; வேலைவாய்ப்பை உருவாக்க ஆலோசனை

தினமலர்  தினமலர்
‘நிடி ஆயோக்’ சி.இ.ஓ., குழுக்கள் அமைப்பு; வேலைவாய்ப்பை உருவாக்க ஆலோசனை

புதுடில்லி : வேலைவாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வது, விவ­சா­யி­களின் வரு­வாயை பெருக்­கு­வது, சுல­ப­மாக தொழில் துவங்­கும் வழி­மு­றை­கள் உள்­ளிட்­டவை குறித்து ஆலோ­சனை வழங்­குவதற்கு, ஆறு குழுக்­களை, ‘நிடி ஆயோக்’ அமைத்­து உள்­ளது. இக்­கு­ழுக்­களில், சி.இ.ஓ., எனப்­படும், பல்­வேறு நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த, 200 தலைமை செயல் அதி­கா­ரி­கள் இடம் பெற்­றுள்­ள­னர்.

இது குறித்து, நிதி­ய­மைச்­சக அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: அர­சின் கொள்கை திட்­டங்­களை வகுக்­கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, ‘புதிய இந்­தியா – 2022’ என்ற திட்­டத்­தின் கீழ், தலைமை செயல் அதி­கா­ரி­களின் குழுக்­களை அமைத்­துள்­ளது. இக்­கு­ழுக்­கள், தொழில் துறை­யில் அடுத்த தலை­முறை தொழில்­நுட்­பங்­களை புகுத்­து­வது, நாளைய நக­ரங்­களை வடி­வ­மைப்­பது, தொழில் துவங்­கு­வதை மேலும் சுல­ப­மாக்­கு­வதற்கான பரிந்துரைகளை வழங்கும்.

மேலும், வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வது, விவ­சா­யி­களின் வரு­வாயை இரட்­டிப்­பாக்­கு­வது, வங்கி, காப்­பீடு உள்­ளிட்ட துறை­களின் பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண்­பது ஆகி­ய­வற்­றுக்­கான ஆலோ­ச­னை­களை, நிடி ஆயோக் அமைப்­பிற்கு வழங்­கும். அவற்­றின் அடிப்­ப­டை­யில், அரசு உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை