அமெரிக்காவில் தெரிந்தது முழு சூரிய கிரகணம்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் தெரிந்தது முழு சூரிய கிரகணம்

வாஷிங்டன்:அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் கடந்து செல்லும் போது சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வு ஒரு நிமிடம், 36 விநாடிகளுக்கு பூமியில் இருள் சூழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது. எனினும் தெற்கு கரோலினா மாகாணம் உள்ளிட்ட சில மாகாணங்களில் மேக மூட்டம் ஏற்பட்டதால் முழுமையாக தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வைவெறும் கண்ணால் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மூலக்கதை