அஜய் தேவ்கனின் ரெய்டு-ல் இலியானா

தினமலர்  தினமலர்
அஜய் தேவ்கனின் ரெய்டுல் இலியானா

அஜய் தேவ்கனின், "பாத்சாகோ" படத்தில் நடித்துள்ள இலியானா, மீண்டும் ஒரு முறை அவருடன் இணைய உள்ளார். அஜய் தேவ்கன், அடுத்தப்படியாக ரெய்டு படத்தில் நடிக்கிறார். இதில், அவர் வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்தப்படத்தில் இலியானாவும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருக்கிறார். ரெய்டு படத்தை ராஜ் குமார் குப்தா இயக்குகிறார். பூஷண் குமார், அபிஷேக் பதக் மற்றும் குமார் மங்கத் தயாரிக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது, அடுத்தாண்டு ஏப்ரல் 20-ம் தேதி படம் ரிலீஸாகிறது.

மூலக்கதை