மூன்று நாளில் ரூ.11.30 கோடி வசூலித்த பரேலி கி பார்பி

தினமலர்  தினமலர்
மூன்று நாளில் ரூ.11.30 கோடி வசூலித்த பரேலி கி பார்பி

ராஜ்குமார் ராவ், ஆயுஸ்மான் குரானா, கிர்த்தி சனோன் நடிப்பில் வெள்ளியன்று வெளியான படம் பரேலி கிர் பார்பி. அஸ்வினி ஐயர் திவாரி இயக்கிய இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முக்கோண காதல் கதையாக, அனைவரும் ரசிக்கும்படியான குடும்ப படமாக வெளிவந்த இப்படம் சுமார் ரூ.20 கோடி பட்ஜெட்டில் தயாரானது. இந்தியா முழுக்க 1000 தியேட்டர்களில் வெளியான இப்படம் முதல் மூன்று நாளிலேயே ரூ.11.30 கோடி வசூலித்திருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று தினங்களில் படத்தின் பட்ஜெட் தொகையை வசூலித்துவிடும் என்கிறார்கள்.

மூலக்கதை