காமெடியில் ஸ்கோர் பண்ணிய நாகேஷின் பேரன்

தினமலர்  தினமலர்
காமெடியில் ஸ்கோர் பண்ணிய நாகேஷின் பேரன்

சந்தானம் நாயகனாக நடித்துள்ள படங்களில் சர்வர் சுந்தரம் விரைவில் ரிலீசாகிறது. ஏற்கனவே தனது முந்தைய படங்களில் நடனம், ரொமான்ஸ் என மெருகேறி வந்த சந்தானம், இந்த படத்தில் ஆக்சன் மட்டுமின்றி எமோசனல் காட்சிகளிலும் மனதை தொடும் வகையிலும் நடித்திருக்கிறாராம். மேலும், இதற்கு முன்பு, தான் காமெடியனாக நடித்து வந்தபோது, ஹீரோக்களின் நண்பனாக படம் முழுக்க வந்து காமெடி செய்தார் சந்தானம்.

ஆனால், இப்போது இந்த சர்வர் சுந்தரம் படத்தில் சந்தானத்தின் நண்பனாக மறைந்த நடிகர் நாகேஷின் மூத்த பேரன் பிஜேஷ் நடித்திருக்கிறார். தனது தாத்தா, அப்பா பாணியில் அவ்வப்போது மிமிக்ரி செய்து நடித்துள்ள பிஜேஷ், காமெடியிலும் சந்தானத்துடன் இணைந்து ஸ்கோர் பண்ணியிருக்கிறாராம்.

சர்வர் சுந்தரம் படத்திற்கு பிறகு, பிஜேஷ் காமெடியில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்கிறார்கள்.

மூலக்கதை