பிரம்மாண்டமாக நடைபெறும் ஸ்பைடர் இசை வெளியீடு

தினமலர்  தினமலர்
பிரம்மாண்டமாக நடைபெறும் ஸ்பைடர் இசை வெளியீடு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல்ப்ரீத் சிங் நடிக்கும் தெலுங்குப்படம் 'ஸ்பைடர்'. இந்தப் படத்தின் அனைத்து படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது பரபரப்பாக போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

ஆயுதபூஜையை தொடர்ந்து வரும் விடுமுறை தினங்களை மனதில் கொண்டு ஸ்பைடர் படத்தை செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 350 தியேட்டர்களில் ஸ்பைடர் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக அதே தேதியில் வெளியாக இருந்த வேலைக்காரன் படத்துக்கு கடும் போட்டி ஏற்பட்டு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் பாடல்களையும், டிரைலரையும் சென்னையில் மிக விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர். 'ஸ்பைடர்' படப் பாடல்கள் எப்போது வெளியாகும் என்று உறுதிய செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் 'ஸ்பைடர்' படப் பாடல்கள் செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மிகப் பிரம்மாண்டமானமுறையில் இந்த விழா நடைபெறவிருக்கிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் இப்படத்தில் மகேஷ் பாபுவே தமிழிலும் டப்பிங் பேசியிருக்கிறார்! மகேஷ் பாபுவுடன் பரத், எஸ்.ஜே.சூர்யா முதலானோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

மூலக்கதை