கூட்டாளி: புதுவசந்தம் மாதிரியான கதை

தினமலர்  தினமலர்
கூட்டாளி: புதுவசந்தம் மாதிரியான கதை

எஸ்.பி.பிக்சல்ஸ் சார்பில் சுரேஷ்பாபு, பெருமாள் சாமி இணைந்து தயாரிக்கும் படம் கூட்டாளி. புதுமுகம் எஸ்.கே.மதி இயக்குகிறார். சதீஷ், கிரிஷா குரூப், கல்யாணம், அருள்தாஸ், கவுசல்யா, உதயபானு மகேஸ்வரன், போஸ்டர் நந்தகுமார், அப்புக்குட்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். சுரேஷ் நடராஜன் ஒளிப்பதிவு செய்கிறார், பிரிட்டோ மைக்கேல் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் எஸ்.கே.மதி கூறியதாவது:

நான்கு ஆண்களின் உயர்வுக்கு ஒரு பெண் காரணமாக இருக்கிற கதை. பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த புதுவசந்தம் பாணியிலான கதை. இந்த காலத்துக்கான விஷயங்களோடு தயாராகிறது. பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட நால்வர் நண்பர்களாக, அவர்களோடு ஒரு பெண்ணும் தோழியாகிறார். வாழ்விலும் தொழிலிலும் ஒரு தோழியால் வரும் பிரச்சினைகளையும், அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை ஜனரஞ்சகமாகவும், விறுவிறுப்புடனும், படமாக்கி இருக்கிறோம் என்றார்.

மூலக்கதை