ஒரு நாள் கிரிக்கெட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

தினமலர்  தினமலர்
ஒரு நாள் கிரிக்கெட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

தம்புலா: இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று ஆக.,20 தம்புாவில் நடந்தது. முதல் விளையாடிய இலங்கை அணி 43.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும்இழந்து 216 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 28.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஷிகர் தவான் 132 ரன்களும், விராட்கோலி 82 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

மூலக்கதை