விஜய்யுடன் போட்டிபோடும் பிரபுதேவா?

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
விஜய்யுடன் போட்டிபோடும் பிரபுதேவா?

விஜய்யின் ‘மெர்சல்’ படத்துடன், பிரபுதேவா நடித்துள்ள ‘குலேபகாவலி’ படத்தையும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது.  


 
  கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துவரும் படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில் பிரபுதேவா ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.

1947ஆம் ஆண்டு தொடங்கி, தற்போதைய காலகட்டம் வரை நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.  
  எனவே, ஏகப்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார் பிரபுதேவா. படத்தின் ஷூட்டிங் முடிந்து, பாடல்கள் மட்டுமே ஷூட் செய்யாமல் பாக்கி உள்ளன.

இந்தப் படத்தை, தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ தீபாவளிக்கு ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை