பணமதிப்பிழப்பு நடவடிக்கை அதிகம் பாதித்தது இவர்களைத்தான்: அருண் ஜெட்லி பேச்சு

விகடன்  விகடன்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அதிகம் பாதித்தது இவர்களைத்தான்: அருண் ஜெட்லி பேச்சு

மத்திய அரசால் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைடுகளைத்தான் அதிகம் பாதித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், "பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு  பின் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகள் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் நக்சலைட்களுக்கு  போதிய பணம் கிடைக்காமல் போயிருக்கிறது. இதனால், அவர்களால் தங்களது திட்டங்களை செயல்படுத்த போதிய பணம் கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளனர். இதற்கு, தற்போது குறைந்துள்ள போராட்டங்களே சாட்சி. ஏனெனில், முன்னெல்லாம், போராட்டம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் தெருக்களில் கூடுவர். இப்போது 20 பேர் கூட போராட்டத்திற்கு வருவதில்லை" என்றார். 

மேலும் பேசும்போது, "இந்த திட்டத்தால், முன்னர் பொருளாதாரத்திற்கு வெளியே புழக்கத்தில் இருந்த பணம், தற்போது முறையாக வங்கி நடைமுறைக்குள் வந்துள்ளது. அதேபோல, பா.ஜ.க. ஆட்சியில்தான் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பினாமி சொத்து தடை, ஸ்பெக்டரம், இயற்கை வளங்கள் நேர்மையான முறையில் ஒதுக்கீடு போன்றவை மேற்கொள்ளப்பட்டன" என்று கூறினார்.
 

மூலக்கதை