இந்தியர்களுக்கு பாக்., குடியுரிமை

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத்: இந்தியர்கள், 298 பேருக்கு, பாகிஸ்தானில் வசிப்பதற்கான குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த, 2012லிருந்து, தற்போது வரை, இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்த, 298 பேருக்கு, பாகிஸ்தான் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2015ம் ஆண்டில், 15 இந்தியர்கள் மட்டுமே குடியுரிமை பெற்றனர். இந்த எண்ணிக்கை, 2016ம் ஆண்டில், 69 ஆக உயர்ந்தது.
பாகிஸ்தானில் வசிப்பதற்கான குடியுரிமை பெறுவது மிக கடினம். ஆனால், இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பலர், குடியுரிமை பெறாமல் சட்டவிரோதமாக, பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை