பிரிட்டனின் மேதாவி குழந்தை

தினமலர்  தினமலர்

லண்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 12 வயது சிறுவன், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் மேதாவி குழந்தை பட்டத்தை வென்றுள்ளார். பிரிட்டனை மையமாக வைத்து செயல்படும், 'சேனல் - 4 டிவி' யில், 8 - 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான வினாடி, வினா நிகழ்ச்சி
நடத்தப்பட்டது. 20 சிறுவர்கள் பங்கேற்றனர். இருவர், இறுதிப் போட்டிக்கு தேர்வாயினர். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ராகுல் தோஷி, 12, அதிகமான கேள்விகளுக்கு சரியான விடையளித்து, பிரிட்டனின் 'மேதாவி குழந்தை' பட்டத்தை வென்றார். ராகுல் தோஷியின் நுண்ணறிவு திறன், 162 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவு, பிரபல விஞ்ஞானிகள், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஆக்கின்ஸ் ஆகியோரின் நுண்ணறிவைக் காட்டிலும் அதிகம். ராகுல் தோஷியின் தந்தை மினேஷ், தகவல் தொழில் நுட்ப மேலாளராகவும், தாயார் கோமல், மருந்தாளுனராகவும் உள்ளனர்.

மூலக்கதை