ரஷ்யாவிலும் கத்திக்குத்து தாக்குதல்: 8 பேர் காயம் - ஐ.எஸ்., இயக்கம் பொறுப்பேற்பு

தினமலர்  தினமலர்

மாஸ்கோ: ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி செய்யும் நகரான சுர்குத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்., இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.ஸ்பெயின், பின்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து ரஷ்யாவிலும் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. சுர்குத் நகரம் மாஸ்கோவிலிருந்து வடகிழக்கே சுமார் 2000 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது.தாக்குதல் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை