15 மணிநேர தாமதம்! - இருபதாயிரம் பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்கும் SNCF!!

PARIS TAMIL  PARIS TAMIL
15 மணிநேர தாமதம்!  இருபதாயிரம் பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்கும் SNCF!!

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஓகஸ்ட் 20 ஆம் திகதி பிரான்சின் தென்கிழக்கு பகுதியான Bouches-du-Rhône இல் தொடரூந்து போக்குவரத்து தடை ஏற்பட்டது. Aubagne பகுதியில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயினால் இந்த போக்குவரத்து தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது. 
 
அப்பகுதி பயணிகளுக்கு இன்று காலை 5.30 மணிக்கு, TGV சேவைகள் இரத்துச்செய்யப்படதாக SNCF குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவித்திருந்தது. Aubagne இல் மொத்தம் 240 ஹெக்டேயர்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்நிலையில் பயணிகள் 15 மணிநேரம் வரை பயண நேரம் தாமதத்தை சந்தித்தனர். இதனால் பயணிகள் அனைவருக்கும் நஷ்ட்ட ஈட்டை வழங்க உள்ளதாக சற்று முன்னர் SNCF அறிவித்துள்ளது. மொத்தம் 20,000 பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்கப்பட உள்ளது. 
 
SNCF அறிவிக்கும் போது, 'இது விதிவிலக்கான தடை ஆகும். இதற்கு யாருமே பொறுக்கு கூற முடியாது!' என குறிப்பிட்டுள்ளது. அதேவேளை தொடரூந்து நிலையங்களிலும் அதிகளவான பயணிகள் கூட்டமாக காத்திருந்ததாகவும், பல இன்னல்களை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கதை