சாஹோ படத்தில் ஜாக்கி ஷரோப்

தினமலர்  தினமலர்
சாஹோ படத்தில் ஜாக்கி ஷரோப்

டைரக்டர் சுஜீத் ரெட்டி இயக்கும் படம் சாஹோ. இப்படத்தில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்கள் தவிர இப்படத்தில் நீல் நிதின் முகேஷ், சுன்கி பாண்டே என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறதாம். தற்போது இப்படத்தில் நடிப்பதற்கு மற்றொரு பாலிவுட் பிரபலத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

இப்படத்தில் ரவுடி வேடத்தில் நடிக்க ஜாக்கி ஷரோப்பிடம் தான் பேசப்பட்டு வருகிறதாம். இப்படத்தில், இந்தியாவிலேயே மிகப் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் காமெடியான ரவுடி கேரக்டரில் தான் ஜாக்கி ஷரோப் நடிக்க போகிறாராம். அடுத்த வாரம் முதல் ஐதராபாத்தில் நடக்கும் சூட்டிங்கில் ஜாக்கி ஷரோப் கலந்து கொள்ள போகிறாராம்.

மூலக்கதை