கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை : பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தகவல்

தினகரன்  தினகரன்

இஸ்லாமாபாத்: கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை அளித்துள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி., சேக் ரோஹேயில் கேட்ட கேள்விக்கு உள்துறை அமைச்சகம்  பதில் அளித்துள்ளது. அதில், கடந்த 2012-ம் ஆண்டு 48 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2013ல் 75 பேருக்கும், 2014ல் 76 பேருக்கும், 2015ல் 15 பேருக்கும், 2016ல் 69 பேருக்கும்,  2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரை 15 இந்தியர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் குடியுரிமை பெறுவது உலகளவில் மிக கடினமானது. ஆனால் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பர்மாவிலிருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக இங்க குடியேறுகின்றனர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை