பணமதிப்பு நீக்கத்தால் காஷ்மீரில் வன்முறைகள் குறைந்துள்ளன : அருண் ஜெட்லி

தினகரன்  தினகரன்

மும்பை: பண மதிப்பு நீக்கம் மற்றும் என்.ஐ.ஏ.வின் அதிரடி நடவடிக்கைகளால் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பணம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்த நடவடிக்கைகளால் பாகிஸ்தானின் நிதி உதவி தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறினார். இதனால் கல்வீச்சி சம்பவகங்ளை துண்டிவிடுவது, பிரிவினைவாதிகளுக்கு சிரமமாகிவிட்டது என்பது அவரது கருத்தாகும். பண தட்டுப்பாடு காரணமாக தற்போது அவர்களால் 20, 30 பேரைக்கூட திரட்ட முடியவில்லை என்று கூறியுள்ளார். பண மதிப்பு நீக்கத்தால் கள்ளநோட்டுகள் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டதாக அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதே கருத்தை லக்னோவில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் என்.ஐ.ஏ.வின் கடும் நடவடிக்கைகளால் கல்வீச்சி சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன என்றார். அதேபோல உள்நாட்டு தீவிரவாத நடவடிக்கைகளும் குறைந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை