Hauts-de-Seine - நபருக்கு தலையில் துப்பாக்கிச்சூடு! - தாக்குதல்தாரி தப்பி ஓட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
HautsdeSeine  நபருக்கு தலையில் துப்பாக்கிச்சூடு!  தாக்குதல்தாரி தப்பி ஓட்டம்!!

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு ஒன்றில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகள் தப்பிச்சென்றுள்ளனர். 
 
சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் Hauts-de-Seine, இன் Colombes பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடையில் சில பொருட்களை வாங்கிவிட்டு, rue Paul-Bert இல் நடந்து சென்றுகொண்டிருந்த போது, இரண்டு ஸ்கூட்டர் வகை உந்துருளியில் மர்ம நபர்கள் சிலர் சுற்றிவளைத்தனர். அதில் ஒருவன் ரைஃபிள் வகை துப்பாக்கியால் குறித்த 39 வயது நபரின் தலையில் சுட்டுவிட்டு, அனைவரும் தப்பிச்சென்றுள்ளனர். 
 
தாக்குதலுக்கு இலக்கான நபர் Smur எனும் தொலைபேசி அவசர அழைப்பில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் நோயாளர் காவு வண்டியில் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் நபர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரை காவல்துறையினர் முன்னதாக அறிந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை