’ஏழ்மையா நேர்மையா?’ - வைரத்தைத் திருப்பி கொடுத்த சிறுவன்!

விகடன்  விகடன்
’ஏழ்மையா நேர்மையா?’  வைரத்தைத் திருப்பி கொடுத்த சிறுவன்!

நாம் போகும் வழியில் வைரங்கள் நிரம்பியப் பை கிடக்கிறது. நாம் என்ன செய்வோம்? ஒரு நிமிடம் யோசித்துவிட்டு உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!


 

குஜராத்தில் 15 வயது சிறுவன் விஷால் வழியில் கிடந்த வைரங்கள் நிறைந்த பையை, அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைத்துள்ளார். உலகின் 90% வைரத்தை பாலிஷ் செய்யும் சூரத் நகரில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரத்தில் வைர வியாபாரி ஒருவர் பாதுகாப்பு பெட்டகத்தில் எடுத்து கொண்டு போன வைர பைகளில் ஒன்று சாலையில் விழுந்துவிட்டது. அந்தப் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் விஷாலின் கைகளில் தவறி விழுந்த வைரப் பை கிடைத்துள்ளது. அதனை திறந்து பார்த்த விஷால் தன் தந்தையிடம் அதனை ஒப்படைத்துள்ளார். வைரத்தின் சொந்தக்காரரிடம் அதனை ஒப்படைக்க வேண்டும் என்று விஷால் தன் தந்தையிடம் தெரிவித்துள்ளார். 

விஷாலின் தந்தை வாட்ச் மேனாக பணிப்புரிகிறார். ஏழ்மையான குடும்ப சூழ்நிலையை எண்ணி அந்த வைரத்தை அவர் சொந்தமாக்கி கொள்ளவில்லை. வைரங்கள் அடங்கிய அந்தப் பையை வைர வியாபாரிகள் சம்மேளனத்தில் ஒப்படைத்துவிட்டார். 

தந்தை மற்றும் மகனின் நேர்மையை பாராட்டும் வகையில் சூரத் வைர வியாபாரிகள் சம்மேளனம் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளது. மேலும் வைரத்துக்கு சொந்தக்காரர் விஷாலுக்கு 30,000 ரூபாய் பரிசாக கொடுத்துள்ளார்.  வைர வியாபாரிகள் சம்மேளனத்தின் தலைவர் விஷாலுக்கு 11 ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்துள்ளார். விஷாலுக்கு மொத்தம் 41,000 ரூபாய் பரிசாகக் கிடைத்துள்ளது. விஷால் ஒப்படைத்த அந்த வைரத்தின் மதிப்பு 40 லட்சம்!
 

மூலக்கதை