ராஜீவ் காந்தி பிறந்தநாள்: மோடி, சோனியா அஞ்சலி

தி இந்து  தி இந்து
ராஜீவ் காந்தி பிறந்தநாள்: மோடி, சோனியா அஞ்சலி

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் ராஜீவ் பிறந்த நாளான இன்று ட்விட்டரில் குறிப்பிட்டு நினைவுகூர்ந்தார்.

ராஜீவ் காந்தி 1944ல் இதே நாளில் பிறந்தார். அவர் இந்தியப் பிரதமராக 1984 முதல் 1989 வரை பணியாற்றினார். 1991 மே 21 அன்று தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் படுகொலை செய்யப்பட்டார்.

ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி விடுத்துள்ள ட்வீட்டர் செய்தி ''முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழாவில், அவரது பிறந்தநாளில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாம் மறக்காமல் இன்று நினைவில் நிறுத்துவோம், நாட்டிற்கான அவரது பங்களிப்பை நினைவுகூர்வோம்.''

இவ்வாறு மோடி தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி வீர்பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா வதேரா, ராபர்ட் வதேரா பிரியங்கா மகள் மிராயா ஆகிய ராஜீவ் காந்தி குடும்பத்தினரும் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் வருகை தந்து ராஜீகாந்தி சமாதியில் மீது மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இன்று ராஜீவ் காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு புதுடெல்லியில் காங்கிரஸ் ராஜீவ் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் நினைவஞ்சலி வீடியோ:

மூலக்கதை