பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற 298 இந்தியர்கள்

தினமலர்  தினமலர்
பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற 298 இந்தியர்கள்

இஸ்லாமாபாத்: கடந்த 5 வருடங்களில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை அளித்துள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் பார்லிமென்டில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி., சேக் ரோஹேயில் கேட்ட கேள்விக்கு உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
அதில், கடந்த 2012ல் 48 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2013ல் 75, 2014ல் 76, 2015ல் 15, 2016ல் 69, இந்த வருடம் ஏப்ரல் 14 வரை 15 இந்தியர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் குடியுரிமை பெறுவது உலகளவில் கடினமான பணியாக உள்ளது. ஆனால், இந்தியா, ஆப்கன், வங்கதேசம் மற்றும் பர்மாவிலிருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக இங்க குடியேறுகின்றனர். இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை