பிரித்தானியர்கள் தொடர்பில் ஆய்வில் வெளியான புதிய தகவல்!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரித்தானியர்கள் தொடர்பில் ஆய்வில் வெளியான புதிய தகவல்!

செல்போன் பயன்படுத்தியப்படி வாகனம் இயக்கி பொலிசாரிடம் கடந்த வருடம் 70000-க்கும் அதிகமான வாகன ஓட்டிகள் சிக்கியதாக தெரியவந்துள்ளது.
 
பிரித்தானியாவில் கார் ஓட்டுபவர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் அமுலில் உள்ளது, ஆனால் சட்டத்தை மீறி இதை செய்பவர்களின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் உயர்ந்து வருகிறது.
 
பிரித்தானியாவின் கார்கள் காப்பீட்டு நிறுவனமான Ingenie, இதுகுறித்த ஆய்வை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, கடந்த வருடத்தில் மட்டும் மொத்தம் 70,945 பேர் சட்டத்தை மீறி வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தி பொலிசில் சிக்கியுள்ளனர்.
 
பிரித்தானியாவின் தென்கிழக்கில் இருக்கும் Thames Valley பகுதி வாகன ஓட்டிகள் மற்ற பகுதி ஆட்களை விட இரு மடங்கு இந்த தவறை செய்துள்ளனர், Berkshire, Buckinghamshire மற்றும் Oxfordshire பகுதியில் 9,242 பேர் பிடிப்பட்டுள்ளனர்.
 
Essex பகுதியில் 5,702 வாகன ஓட்டிகளும், வடக்கு அயர்லாந்தில் 5,013 பேரும் பிடிப்பட்டுள்ளனர்.
 
இதற்கு அடுத்தடுத்த இடங்களில் West Yorks, Merseyside மற்றும் Devon பகுதிகள் உள்ளது, இவர்களிடம் தோராயமாக £1.2 மில்லியன் அளவு பணம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
 
செல்போன் பயன்ப்படுத்திய படி வாகனம் ஓட்டியதால் 573 விபத்துக்களும், 19 மரணங்களும் நிகழ்ந்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
35,000 பேரின் ஓட்டுனர் உரிமங்களின் புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளன, குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் வரும் பாதிப்பின் அதே அளவு செல்போன் பயன்ப்படுத்துவதாலும் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
 
Ingenie தலைவர் Ketteringham கூறுகையில், எந்த எண்ணிக்கை எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது, தண்டனையை கண்டு வாகன ஓட்டிகள் பயப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது என கூறியுள்ளார்.

மூலக்கதை