காரைக்குடி-கொச்சுவேலி ரயில் ரத்து

தினகரன்  தினகரன்

சென்னை: தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கொச்சுவேலியில் இருந்து ஆக.23, 30 தேதிகளில் புறப்பட்டு  காரைக்குடி செல்ல வேண்டிய பல மடங்கு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்(06044),   காரைக்குடியில் இருந்து ஆக.24, 31 தேதிகளில் புறப்பட்டு  ெகாச்சுவேலி செல்ல வேண்டிய பல மடங்கு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்(06043) ரத்து  செய்யப்படுகின்றன.தாம்பரத்தில் இருந்து ஆக.21ம் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்படும் கவுகாத்தி செல்லும் வாராந்திர ரயில்,திருவனந்தபுரத்தில் இருந்து ஆக.22ம் தேதி  மாலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வழியாக  கவுகாத்தி செல்லும் வாரந்திர ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை