கன்னியாகுமரியில் தொடர் கடல் சீற்றம்

தினகரன்  தினகரன்

கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினந்தோறும்  வந்து செல்கின்றனர். இவர்களில் பலரும்,  விவேகானந்தர் பாறையை படகில் சென்று பார்வையிடுவார்கள். இதற்காக நேற்று முன்தினம் காலை படகு சேவை தொடங்கியது. ஆனால், காலை 10  மணியளவில் கடலில் திடீரென சீற்றம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, படகு போக்குவரத்தை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரத்து செய்தது.நேற்று காலையும் ஏராளமான சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். ஆனால் கடல் சீற்றம் காரணமாக படகு சேவை தொடங்கவில்லை. இதையடுத்து  நாள் முழுவதும் படகு சேவை நிறுத்தப்பட்டது. கடல் சீற்றத்தால் கடந்த 2 நாளில் 20,000 சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

மூலக்கதை