மின் தடைக்கு பொறுப்பேற்று அமைச்சர் ராஜினாமா

தினமலர்  தினமலர்
மின் தடைக்கு பொறுப்பேற்று அமைச்சர் ராஜினாமா

தைபே, : சீனாவுக்கு அருகில் உள்ள, சிறிய தீவு நாடான தைவானில், மின் தடைக்கு பொறுப்பேற்று, அந்த நாட்டு அமைச்சர், தன் பதவியை ராஜினாமா செய்தார்.தைவான் நாட்டில், தற்போது கடுமையான வெப்பம் நிலவுகிறது. சமீபத்தில், இங்கு மின்தடை ஏற்பட்டது. மாலை நேரத்தில் ஏற்பட்ட மின் தடையால், சிக்னல்கள் இல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வர்த்தக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் வீடுகள் இருளில் மூழ்கின. தைபே, தாய்சுங், தாய்னான் மற்றும் மூன்று மாகாணங்களில் வசிக்கும் மக்கள், இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்த மின்தடை ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, அந்த நாட்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர், சிஹ் - குங், மின் தடைக்கு மன்னிப்பு கேட்டதுடன், தன் பதவியையும் ராஜினாமா செய்தார்.

மூலக்கதை