ஜெ., இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது சட்டப்படி தவறு : ஸ்டாலின்

தினமலர்  தினமலர்
ஜெ., இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது சட்டப்படி தவறு : ஸ்டாலின்

சென்னை: ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது சட்டப்படி தவறு என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
லண்டனில் இருந்து இன்று அதிகாலை சென்னை திரும்பிய தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியின் போது அவர் : ‛‛ஜெயலலிதா இல்லை நினைவிடமாக மாற்றுவது சட்டப்படி தவறு. ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ விசாரணை கோரிய ஓ.பி.எஸ்., தன் நிலைப்பாடை மாற்றியது ஏன்?. டெல்லியின் கதை, திரைக்கதை, வசனத்திற்கேற்ப ஓ.பி.எஸ்., மற்றும் ஈ.பி.எஸ்., நடித்து கொண்டிருக்கின்றனர். '' என கூறினார்.

மூலக்கதை