பிஜி தீவில் பூகம்பம் 6.4 ரிக்டராக பதிவு

தினகரன்  தினகரன்

வெலிங்டன் :  பிஜி தீவில் நேற்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் திடீரென பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதனால், கட்டிடங்கள் ஆடியதால் பொதுமக்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர். தலைநகர் சுவாவின் கிழக்கு பகுதியை ஒட்டிய கடற்கரையை மையமாக கொண்டு 287 கி.மீட்டர் சுற்றளவுக்கு 538 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 6.4 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மூலக்கதை