பாக். அன்னை தெரசா ரூத் கத்ரினாவுக்கு இறுதிச்சடங்கு

தினகரன்  தினகரன்

கராச்சி : ஜெர்மனியின் லிப்ஜிக் பகுதியில் கடந்த 1929ம் ஆண்டு பிறந்தவர் ரூத் கத்ரினா மார்த் பாவ். கடந்த 1960ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகருக்கு வருகை தந்தார். அங்கு தொழுநோயால் அவதிப்படும் மக்களை கண்டு மனம் வெதும்பி தொழுநோய் மையத்தை நிறுவி சேவை செய்தார். தொழுநோயாளிகளுக்கு செய்த சேவைகளை பாராட்டி பல்வேறு விருதுகளை வழங்கி அந்நாட்டு அரசு அவரை கவுரவித்தது. அவரது தீவிர முயற்சியால் உலக சுகாதார நிறுவனம் கடந்த 1996ம் ஆண்டு பாகிஸ்தானை தொழுநோய் இல்லாத நாடாக அறிவித்தது. இந்நிலையில் ரூத் கத்ரினா கடந்த 10ம் தேதி மரணம் அடைந்தார். கராச்சியின் சத்தார் பகுதியில் உள்ள செயின்ட் பேட்ரிக் சர்ச்சுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் 19 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் அதிபர் மமூன் உசேன் கலந்து கொண்டார்.

மூலக்கதை