டி20-யில் முதல் விக்கெட்டுக்காக புதிய சாதனை: கென்ட் தொடக்க வீரர்கள் அதிரடி

தி இந்து  தி இந்து
டி20யில் முதல் விக்கெட்டுக்காக புதிய சாதனை: கென்ட் தொடக்க வீரர்கள் அதிரடி

இங்கிலாந்தின் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடரில் கென்ட் அணியின் தொடக்க வீரர்களான ஜோ டென்லி மற்றும் டேனியல் பெல்-டிரம்மண்ட் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக அதிக ரன்கள் குவித்து உலக சாதனை புரிந்துள்ளனர்.

எசக்ஸ் அணிக்கு எதிராக செம்ஸ்போர்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டென்லி- டேனியல் பெல் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 207 ரன்களைக் குவித்து புதிய டி20 சாதனை நிகழ்த்தினர்.

ரன்கள் அளவில் இந்தச் சாதனை 3-ம் இடத்தில் உள்ளது, தொடக்க விக்கெட்டுக்காக இவர்கள் சாதனை புரிந்தாலும் ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி கூட்டணி 2-வது விக்கெட்டுக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் இருமுறை 200 ரன்களுக்கும் மேல் சேர்த்துள்ளனர்.

இந்த ஆட்டத்தில் டென்லி 66 பந்துகளில் 127 ரன்களையும் பெல்-ட்ரம்மண்ட் 80 ரன்களையும் எடுத்தனர்.

இத்தனைக்கும் எசக்ஸ் அணியில் மொகமது ஆமீர் வீசினார், ஆனால் டென்லி புரட்டி எடுத்து 27 பந்துகளில் அரைசதம் எட்டினார். இந்தப் போட்டியில் எசக்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

மூலக்கதை